ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது - போதை மாத்திரை

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

போதை மாத்திரை விற்ற நால்வர் கைது
போதை மாத்திரை விற்ற நால்வர் கைது
author img

By

Published : Jul 3, 2021, 11:46 PM IST

கோயம்புத்தூர்: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக மாநகர காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போதை மாத்திரை விற்பனை

ஆத்துப்பாலம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் நால்வரும் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகமது யாசிர், முகமது முஸ்தபா, அன்சாரின், முத்து முகமது என்பதும், நால்வரும் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

அவர்களைக் கைது செய்த காவல்துறையினர், நால்வரிடமும் இருந்த நைட்ராஜிபம் (Nitrazepam) என்னும் ஐம்பது போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். நால்வரையும் நீதிபதி முன்நிறுத்தி, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

author-img

...view details