தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிதாக அதிகரித்துள்ள போதைப் பொருள் - துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் - புதிதாக அதிகரித்துள்ள போதைப் பொருள்

கோவை: புதிதாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் தெரிவித்துள்ளார்.

drug issue dsp
drug issue dsp

By

Published : Feb 7, 2020, 11:38 PM IST

கோவையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”கோவையில் புழக்கத்தில் இருந்த கஞ்சா விற்பனை முழுவதுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. சமீபகாலமாக கோவையில் எல்.எஸ்.டி ஸ்டாம்ப்புகள், எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் போதைக்கு பயன்படு்த்தப்பட்டுவருகின்றன.

புதிதாக அதிகரித்துள்ள போதைப் பொருள்

சமீபத்தில் இந்த விதமான போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எல்.எஸ்.டி , எம்.டி.ஏம்.ஏ போதை பொருள் நடமாட்டம் புதிதாக அதிகரித்துள்ளது. இதை சப்ளை செய்யும் நபர்களை தேடி வருகின்றோம். எம்.டி.ஏம்.ஏ மாத்திரை சாப்பிட்டால் மனநலம் பாதிக்கப்படும், தன்னை அறியாமல் நிறைய விஷயங்களை அவர்களே செய்யக்கூடும். இதுபோன்ற போதை மருந்துகள் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவதில்லை.

அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அனைத்து கல்லூரிகளிலும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. மது, கஞ்சாவிற்கு மாற்றாக புதிய போதையாக இதை பயன்படுத்துகின்றனர். எங்கிருந்து கொண்டு வருகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம்.

போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்ட்

இந்த விதமான போதை பொருட்களால் வாசனை வராது என்பதால் இந்த போதை பொருளை கண்டறிவது கடினம். வெளியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கும் மாணவர்களை குறிவைத்து இது விற்பனை செய்யப்படுகின்றது. மேலும்,வாடகைக்கு வீடு கொடுப்பவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம்” என்றார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details