கோயம்புத்தூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியில் பாஜக விவசாய அணி பிரிவு சார்பில் 'நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நாட்டு மாடுகள், விவசாய கருவிகள் கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இதில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜக கலாசாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், “எந்தக் கட்சியிலும் செய்யாத அளவிற்கு ’27 மாடுகளுக்கு பூஜை செய்து பொங்கல் விழா கொண்டாடுகிறோம். அனைத்து தமிழர்களும் சுதந்திரமான பொங்கல் கொண்டாடி வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் மசோதா விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
பாஜக கலாசாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம்
விவசாயிகள் தான் இந்தியாவின் எதிர்காலம். பொங்கல் கொண்டாடுவது ஓட்டுக்காக அல்ல. மக்கள் திமுகவை வெறுத்துவிட்டனர். அதனால் இந்த விழாவில் நிறைய பேர் கலந்து கொண்டிருக்கின்றனர்’ என்றார்.
துக்ளக் விழாவில் சசிகலா குறித்த விமர்சனம் குறித்து கேட்டபோது,’ அந்த விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை. யாராக இருந்தாலும் பெண்களை விமர்சிக்கக்கூடாது. பொதுவாக திராவிடக் கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை.
காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு கேரளாவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவும் பெண்களுக்காக செயல்படுகிறது. திராவிடக் கட்சிகள் யாரும் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஜெயலலிதா அவர் ஆட்சியில் மரியாதை கொடுத்தார்’ எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, ”நாங்கள் பொங்கல் விழாவை ஓட்டுக்காக செய்யவில்லை, தமிழ்நாடு கலாசாரத்தை மீட்டெடுக்க கொண்டாடுகிறோம். பாஜகதான் தமிழர் கலாச்சாரத்தை அழிக்கிறது என ராகுல் கூறியுள்ளார். 2011இல் காங்கிரஸ் செய்தது தவறு. அவர்களால் கிராமப்புறங்களில் நாட்டு மாடுகள் குறைந்துவிட்டன. ஆனால் பாஜக கலாசாரத்தை மீட்டெடுக்கும்.
பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை
2011இல் காங்கிரஸ் கட்சி செய்தது தவறு என்பதை ராகுல் காந்தி உணர்ந்தாரா என்பது தெரியவில்லை. உணர்திருப்பாரானால் எனக்கு மகிழ்ச்சியே” என்றார்.
துக்ளக் விழா சர்ச்சை குறித்த கேள்விக்கு, ’அது எங்களது நிலைபாடு இல்லை. குருமூர்த்தியின் தனிப்பட்ட கருத்து. அவர் ஒரு ஆசிரியராக வாசகர்களுக்கு பதிலளித்துள்ளார். பதில் சொல்லி இருக்கின்றார். இதில் பாஜக பதில் சொல்ல அவசியமில்லை’ என அண்ணாமலை தெரிவித்தார்.
சூலூர் சட்டப்பேரவை தொகுதியை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:குருமூர்த்தியின் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தை காட்டுகிறது - டிடிவி தினகரன்