தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் திராவிட கட்சிகள்' - கொங்கு வேளாள கவுண்டர் பேரவை

திராவிட கட்சிகள் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து புறக்கணித்துவருவதாக கொங்கு வேளாள கவுண்டர் பேரவை குற்றஞ்சாட்டியுள்ளது.

கொங்கு
கொங்கு

By

Published : Jul 17, 2021, 10:35 PM IST

கோவை காந்திபுரம் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை அலுவலகத்தில் அப்பேரவையின் மாநிலப் பொதுச்செயலாளர் தேவராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை சார்பில் தமிழ்நாட்டிலிருந்து கொங்கு மண்டலத்தைப் பிரித்து தனியாக கொங்குநாடு என்ற பெயரில் தனி மாநிலமாக மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளோம். கொங்கு நாடு மாநிலக் கோரிக்கையை வலுப்படுத்த மற்ற அமைப்புகளுடன் பேசி ஆதரவு கோர இருக்கிறோம். தனி மாநிலக் கோரிக்கைக்காகப் போராட்டம் நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டால் அதிலும் பங்கு பெறுவோம்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்ததுபோல கொங்கு நாடு மாநிலத்தைப் பிரிக்க தனிக்குழு அமைத்து கொங்குமண்டல மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்த வேண்டும்.

கொங்கு மண்டலத்திலிருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகப்படியான வரி செலுத்தப்பட்டாலும் கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றவுடன் கரோனா நிதிக்காக ஸ்டாலின் மற்ற பகுதிகளுக்குச் செல்லாமல் கோவைக்கு வந்து வசூல் செய்துவிட்டுச் சென்றார்.

திராவிட கட்சிகள் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து புறக்கணித்துவருகின்றன. நிர்வாக வசதிக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து கொங்கு நாடு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: லாரியை துரத்திய நாய்.. லாரிக்குள் ஆடு... நண்பேண்டா..

ABOUT THE AUTHOR

...view details