சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று மாலை பரப்புரை மேற்கொண்டார்.
'கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்றாமல் இருந்திருந்தால் இறந்திருப்பேன்..!' - ஸ்டாலின் உருக்கம் - dmk candidate
கோவை: "அண்ணாவின் அருகில் அடக்கம் செய்ய வேண்டும் எனும் கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்றாமல் இருந்திருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்" என்று, திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மோடி ஆட்சியில் கடுமையாக உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் குறைக்கப்படும் என்று திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கின்றோம். மோடியை வீட்டிற்கு அனுப்ப ஓட்டுப்போட்டதை போல எடப்பாடி வீட்டிற்கு போக இந்த தேர்தலில் வாக்களியுங்கள். தற்போது நடைபெறும் இந்த ஆட்சி மைனாரிட்டி ஆட்சி.
கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்கும்படி, வெட்கத்தை விட்டு எடப்பாடி பழனிசாமியின் கையைப் பிடித்து கெஞ்சி கேட்டும் மறுத்து விட்டார். நீதிமன்ற அனுமதி பெற்று கலைஞருக்கு நினைவிடம் அமைத்தோம். அண்ணாவின் அருகில் கலைஞரை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசை நிறைவேறாமல் இருந்திருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்", என்று உருக்கமாக பேசி முடித்தார்.