கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீர் செய்யுமாறு சில அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் மோகனசுந்தரி கூறுகையில், ‘சிங்காநல்லூரிலுள்ள 960 வீடுகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
‘சிங்காநல்லூர் குடியிருப்பு வீடுகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ - குடியிருப்போர் நல சங்கம்! - கோவை மாவட்டச் செய்திகள்
கோவை: சிங்காநல்லூர் குடியிருப்பு வீடுகள் விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என குடியிருப்போர் நல சங்க பொதுக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அவற்றை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம், ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது இந்த விவகாரத்தை சில கட்சியினர் சாதகமாக எடுத்துக் கொண்டு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என அரசியலாக்குகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களினால் கிடைக்கக்கூடிய பயன்களும் தடைபட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே இதை யாரும் அரசியலாக்க வேண்டாம்’ என்றார்.
இதையும் படிங்க:பாழடைந்து ஆபத்தான நிலையிலுள்ள ஆரம்ப சுகாதார கட்டடத்தை இடிக்க கோரிக்கை!