பொதுவாக மழையின்மை காரணமாக கடும் வறட்சி ஏற்படும்போது, பொதுமக்கள் ஒன்று கூடி வருணபகவானை வழிபாடு செய்வது வழக்கம். மழை வரவேண்டும் என்பதற்காக அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்துவருவது வழக்கம்.
இந்நிலையில், கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அங்கு வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
கழுதைகளுக்கு திருமணம் செய்துவைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் கழுதைகளுக்கு திருமணம் செய்வது என கிராம மக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி பிளக்ஸ் அடித்து, சீர்வரிசை எடுத்துவந்து இன்று சுப்பிரமணியர் கோயிலில் மேளதாளம் முழங்க திருமணம் நடத்தப்பட்டது.