தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய் பண்ணைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. கூண்டுகளில் இருந்த நாய்கள் தீயில் கருகி பலி! - coimbatore news

கோவை அருகே நாய் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் கூண்டுகளில் இருந்த 12 நாய்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை சேற்படுத்தியுள்ளது.

Dogs were burnt to death when Unidentified persons set fire to the dog farm
நாய் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் நாய்கள் தீயில் கருகி உயிரிழந்தன

By

Published : Mar 20, 2023, 7:48 AM IST

நாய் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் நாய்கள் தீயில் கருகி உயிரிழந்தன

கோவை:ஆர்.எஸ்.புரத்தை அடுத்த லாலிரோடு பகுதியைச் சேர்ந்த நவீன் மற்றும் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பாபு, இவர்கள் இருவரும் இணைந்து வடவள்ளி கருப்பராயன் கோயில் பகுதியில் நாய் பண்ணை ஒன்று அமைத்து அங்கு விற்பனைக்காக நாய்கள் வளர்த்து வருகின்றனர். 13 நாய்களை அவர்கள் வளர்த்து வந்த நிலையில் நாய்களுக்கு என தனித்தனியே கூண்டுகள் அமைத்துப் பராமரித்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பாபு வழக்கம் போல் நாய் பண்ணைக்குச் சென்று பார்த்தபோது அப்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலாகிய நிலையில் கிடந்ததுள்ளது. மேலும் கூண்டில் இருந்த நாய்கள் அனைத்தும் இறந்த நிலையிலும், ஒரே ஒரு நாய் மட்டும் உயிருக்குப் போராடிய நிலையிலும் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.

இதை அடுத்து அங்குச் சென்ற வடவள்ளி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நாயை மட்டும் மீட்டு அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "மர்ம நபர்கள் யாரோ தீ வைத்துச் சென்றது போல் தெரிகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்படுகிறது. சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.

நாய் பண்ணைக்கு தீ வைக்கப்பட்டு கூட்டில் இருந்த நாய்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் பெண்ணை தாக்கி காரில் ஏற்றிய கொடூரம் - என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details