நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மலைப் பகுதியிலுள்ள குஞ்சப்பனை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமராஜ் (23). இவருக்குத் திருமணமாகி அப்பா சந்திரன், மனைவி சித்ரா, தாய் ராஜம்மாள் தம்பி ஆகியோருடன் ஒரேவீட்டில் வசித்து வருகிறார். ராமராஜ் தனது வீட்டில் பப்பி என்ற நாய்யை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ராமராஜ் நேற்று (அக்.26) மாலை தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வனப்பகுதியிலிருந்து குட்டியுடன் கரடி ஒன்று தோட்டத்துக்குள் புகுந்தது.
விவசாயியை காப்பாற்றிய நாய் அவர் கரடியைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது கரடி அவரது தலையில் கடுமையாக தாக்கியுள்ளது. இதனை அவரது வளர்ப்பு நாய் பப்பி கண்டு, எஜமானை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகக் குரைத்துக் கொண்டே கரடியை விடாமல் துரத்தி, விரட்டியுள்ளது. இதனையடுத்து ராமராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க:வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சென்ற கூடலூர் தலைமை காவலர் பணியிடை நீக்கம்