தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பந்தயத்துக்கு அழைத்த யமஹா..! சீறிப்பாய்ந்த இளைஞர்கள் - race track

யமஹா பைக் ரேஸ் பைக் ரேசில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு டிராக்கில் ஓட்டும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

பைக் விரும்பியா நீங்கள்??...ரேஸ் டிராக்கில் பைக் ஓட்ட அரிய வாய்ப்பு!!
பைக் விரும்பியா நீங்கள்??...ரேஸ் டிராக்கில் பைக் ஓட்ட அரிய வாய்ப்பு!!

By

Published : Jun 6, 2022, 1:18 PM IST

கோவை: யமஹா பைக் தயாரிப்பு நிறுவனம் ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார்ஸ் பந்தய டிராக்கில் நேற்று யமஹா நிறுவனம் அவர்களது நிறுவன பைக்குளை வாங்கிய இளைஞர்களுக்கு(பைக் ரேசில் ஆர்வமுள்ள) ரேஸ் டிராக்கில் பைக் ஓட்ட ஏற்பாடு செய்தது.

அதில் ஆர்வம் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரேஸ் டிராக்கில் முதல் முறையாக தங்களது பைக்கை ஓட்டினர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பைக் மீது ஆர்வம் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரேஸ் டிராக்கில் முதல் முறையாக தங்களது பைக்கை ஓட்டினர்.

யமஹா நிறுவனம் தயாரித்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளை வாங்கியவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பைக் ஓட்டினர். இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் முதல் முறையாக ஒரு பந்தய வீரரைப் போல் உணர்ந்ததாகவும், பைக் மீது மேலும் ஆர்வத்தை ஊட்டும் விதமாக இந்த நிகழ்வு அமைந்ததாகவும் தெரிவித்தனர்.

பைக் விரும்பியா நீங்கள்??...ரேஸ் டிராக்கில் பைக் ஓட்ட அரிய வாய்ப்பு!!

இதையூம் படிங்க: தனியார் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள் - வனத்துறையின் சிறப்பு திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details