தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அள்ளி வாரிய திமுக - அதிர்ச்சியில் வாடிய அதிமுக

பொள்ளாட்சியில் வாக்குப்பதிவுக்கு முன்பே பெரிய நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அள்ளி வாரிய திமுக
அள்ளி வாரிய திமுக

By

Published : Feb 8, 2022, 1:18 PM IST

கோவை: பொள்ளாச்சியை அடுத்த பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், வார்டு எண் 3, 6, 7, 8, 9, 11, 12, 14,15 ஆகிய ஒன்பது வார்டுகளில் எட்டு திமுக வேட்பாளர்கள், ஒரு சுயேச்சை வேட்பாளரை எதிர்த்து தாக்கல்செய்திருந்த அனைத்து வேட்பாளர்களும் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

இதன் காரணமாக 3ஆவது வார்டில் எம். பிரியா, 6ஆவது வார்டில் ஜெ. பரமேஸ்வரி, 7ஆவது வார்டில் என். தேவிகா, 8ஆவது வார்டில் கே. நந்தவேல்முருகன், 11ஆவது வார்டில் ஆர். கஸ்தூரி, 12ஆவது வார்டில் டி. கலைமணி, 14ஆவது வார்டில் ப. நாகராஜ் 15ஆவது வார்டில் ஆர். சபரீஸ்வரன் என எட்டு திமுக வேட்பாளர்களும், 9ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஆர். ரவி என்பவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனால் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பெரும்பான்மை வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றதால் நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. வார்டு எண் 1, 2, 4, 5, 10, 13 ஆகிய 6 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.

நெகமம் பேரூராட்சியை வென்ற திமுக

இது குறித்து திமுக கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் கூறியதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முதலமைச்சர் மக்களுக்காக இரவு, பகலாக உழைத்துவருகிறார். அவரது நல்லாட்சியின் மீது நம்பிக்கை வைத்து மக்கள், பெரிய நெகமம் பேரூராட்சியின் வெற்றியை திமுகவுக்குப் பரிசாக அளித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

பெரிய நெகமத்தைச் சேர்ந்த திமுகவினர் கூறுகையில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி, நம் மாவட்டத்தில் முழு வெற்றிபெறுவோம் என உறுதிபடக் கூறியுள்ளார். ஆகவே இது ட்ரெய்லர்தான், இனிமேல்தான் மெயின் பிக்சரே இருக்கு என்று சினிமா பாணியில் பேசிக்கொள்கின்றனர்.

திமுக, அதிமுக மனுக்கள் தள்ளுபடியால் சுயேச்சை வேட்பாளர் வெற்றி! - மக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details