கோவையைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி சதுரங்கப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இதற்கு வெளிநாடு செல்ல வேண்டும். ஆனால் அதற்கான பணம் அவரிடம் இல்லை.
இதனையறிந்த தர்மபுரி எம்.பி செந்தில்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த மாணவிக்கு நிதியுதவி அளிக்க வேண்டுமென பொதுமக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அவருக்கு ஆறு லட்சம் நிதிதேவை என்பதால் 300 பேர் தலா 2000 ரூபாய் கொடுத்தால் மாணவிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, முதல் நபராக செந்தில்குமார் 2000 ரூபாய் அந்த மாணவியின் வங்கிக் கணக்கில் செலுத்தி அதை ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பொதுமக்களும் ஆர்வத்துடன் அந்த மாணவிக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். இதுவரையில் 26பேர் நிதி உதவி அளித்துள்ளனர். எம்.பி செந்தில்குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் உதவி செய்த நபர்களின் பெயர்களைப் போட்டு நன்றி தெரிவித்து வருகிறார்.
உதவி செய்ய விரும்புகின்றவர்கள் கவனத்திற்கு:-
Bank Details: