கோயம்புத்தூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள மணிகாரம்பாளையம் வாக்குசாவடி அருகே திமுகவினர் வாக்குச் சீட்டுடன் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் பணப்பட்டுவாடா செய்த இருவரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திமுகவினரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்! - DMK Money Distributing
கோயம்புத்தூர்: வாக்குச் சீட்டுடன் பணப்பட்டுவாடா செய்த திமுகவினரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
DMK Money Distributing
அப்போது, அவர்களிடமிருந்த 73 ஆயிரம் ரூபாயை காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் இருவரையும் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பணப்பட்டுவாடா புகாரால் தொகுதிகளில் மறு தேர்தலா? - சத்யபிரதா சாஹூ பதில்