கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராசாமணியை நேரில் சந்தித்து 20 கேள்விகள் அடங்கிய மனுவொன்றை தொகுதி சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக் இன்று வழங்கினார்.
அந்த மனுவில்:-
- கோவையில் எடுக்கப்பட்ட கோவிட்-19 கண்டறிதல் பரிசோதனைகள் குறித்து விரிவான விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.
- தீவிர பாதிப்புள்ள மாவட்டங்களிலிருந்து வந்த நபர்கள் தொடர்பான தேதி வாரியான தகவல்கள் வழங்க வேண்டும்.
- நம் (கோவை) மாவட்டத்தில் எந்தெந்த இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
- தேதி வாரியாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.
- இந்த வைரஸ் (தீநுண்மி) தொற்றுக்கான மருத்துவமனையில் உள்ள சோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள் தெரியப்படுத்த வேண்டும்.
- தேதி வாரியாக பரிசோதனையின்போது உறுதிசெய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, விவரங்கள் வழங்க வேண்டும்.
- தீநுண்மி தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை விவரங்களை வழங்க வேண்டும்.
- தீநுண்மி தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் குறித்த விவரங்களை தயவுசெய்து வழங்க வேண்டும்.
- ஒவ்வொரு நோயாளிக்கும் மருத்துவமனையில் எத்தனை நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரங்களையும் அளிக்க வேண்டும்.
- கோவை மாவட்டத்தில் தீநுண்மி தொற்று பாதிப்புக்குள்ளான அவர்களுடன் நெருக்கமாக இருப்பது விளைவாக கோவிட் சோதனைக்குள்படுத்தப்பட்ட நபர்களின் தெளிவான விவரங்களை வழங்க வேண்டும்.
- நமது வட்டத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நபர்களின் விவரங்களை வழங்க வேண்டும்.
- நம் மாவட்டத்தில் தீநுண்மி தடுப்புக்கான சுகாதார நடவடிக்கைகளை அறிவித்த தேதிமுதல் இன்றுவரை தீநுண்மி தொற்றினாலும், பிற காரணங்களினாலும் இறந்தவர்களின் விவரங்களை வழங்க வேண்டும்.
- மாவட்டத்தில் தீநுண்மி தடுப்பு உபகரணங்கள் அவற்றின் ஆர்டர்களை தேதி வாரியாக விவரிக்க வேண்டும்.
- கோவையில் ரேபிட் கிட் சோதனைக்குள்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை விவரங்கள் தேதி வாரியாக அறிவிக்கப்பட வேண்டும்.
- கோவை மாவட்டத்தில் பிசிஆர் சோதனைக்குள்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை , அவற்றின் விவரங்களை அளிக்க வேண்டும்.
- கோவை மாவட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட கரோனா கண்டறியும் கருவிகள் எத்தனை என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும்.
- நம் மாவட்டத்திற்கு தீநுண்மி பரவலைத் தடுப்பதற்கான மருந்துப் பொருள்கள், வெப்பமானி, மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்ட விவரங்களை தேதி வாரியாக வழங்க வேண்டும்.
- தீநுண்மி தடுப்பு நடவடிக்கையாக இந்த மாவட்டத்தில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்ட அளவு, ஒதுக்கப்பட்ட விவரங்களை தேதி வாரியாக வழங்க வேண்டும். நம் மாவட்டத்தில் மருத்துவமனைகள், சோதனை மையங்களுக்கு எத்தனை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன என்ற விவரங்களையும் வழங்க வேண்டும்.
- கோவை மாவட்டத்தில் பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, கொண்டுவரப்பட்ட swab stick எண்ணிக்கை, பிசிஆர் கிட் எண்ணிக்கை ஆகியவை ஒத்துப்போகிறதா என்று சோதனை செய்யப்பட்டதைத் தெரிவுப்படுத்த வேண்டும்.
- கோவை மாவட்டத்தில் தீநுண்மி தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டனரா என்பது குறித்து தேதி வாரியான விவரங்களை அளிக்க வேண்டும்.
என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக், “ கரோனா தீநுண்மி பெருந்தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் எவ்வகையான ஏற்பாடுகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற முழு விவரங்களையும் அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் 20 கேள்விகள் கொண்ட கோரிக்கை மனு அளித்துள்ளோம். இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்.