குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒருபகுதியாக அச்சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசையும் அம்மசோதாவிற்கு ஆதரவளித்த அதிமுக அரசையும் கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், பொள்ளாச்சி நீதித் துறை நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்ப்பு: திமுக வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினர், அண்டை நாட்டிலுள்ள தமிழ் மக்கள், இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மேலும், தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களுக்கு திமுக வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரவளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மத்திய , மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சாதி மதத்தால் மக்களைப் பிரிக்கும் பாஜக - அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்