அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததில், லாரி மோதி ராஜேஸ்வரி என்ற இளம்பெண் கடந்த 11ஆம் தேதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தால் ராஜேஸ்வரியின் கால் நீக்கப்பட்டது. நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக கொடிக் கம்பம் விழுந்து, ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மீது மட்டும்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என கடுகடுத்தார்.