தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் திமுக துணைத் தலைவருடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக துணைத் தலைவருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல்
திமுக துணைத் தலைவருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல்

By

Published : Jul 29, 2022, 10:27 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகராட்சியில் இன்று மாலை அவசர ஆலோசனைக் கூட்டம் திமுக நகராட்சித் தலைவர் சியாமளா தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி மற்றும் நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் இருந்தனர். 36 வார்டு கவுன்சிலர்களில் மூன்று பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள். இதில் திமுக கவுன்சிலர் கெளதமன் நகராட்சித் துணைத் தலைவராக உள்ளார்.

பெருமாள் கவுன்சிலர் வார்டில் கடந்த சில தினங்கள் முன்பு அத்துமீறி கௌதமன் பாலத்தை இடித்துள்ளார். இந்நிலையில் நகராட்சி கூட்டத்தில் தலைவர் சியாமளா முன்பு திமுக கவுன்சிலர்கள் பெருமாள், கௌதமன் இருவரும் வாய்தகராறில் ஈடுபட்டனர். மேலும் கௌதமன் செயலுக்கு அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

கூட்டத்தில், நகராட்சித் தலைவர் அமைதியாக இருக்கும்படி பலமுறை கூறியும் இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். நகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்ட நகராட்சி அதிகாரிகள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.

இதையும் படிங்க:நியாய விலைக்கடைகளில் கீழே சிந்திய பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது!

ABOUT THE AUTHOR

...view details