தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் வழங்குவதற்கு டோக்கன் கொடுத்த அதிமுக மீது திமுக புகார் - DMK complaint

கோயம்புத்தூர்: பூத் சிலிப்பையும், பணம் வழங்குவதற்கான டோக்கனையும் விநியோகித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக மீது திமுக புகார்  அதிமுக டோக்கன்  அதிமுக புகார்  திமுக புகார்  தேர்தல் புகார்கள்  DMK complains about ADMK giving token for payment  DMK complains about ADMK  DMK complaint  ADMK complaint
DMK Vs ADMK

By

Published : Mar 31, 2021, 11:36 AM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஆறு நாள்களே உள்ள நிலையில், இரவு நேரத்தில் அதிமுகவினர் பெண்களை கொண்டு பூத் சிலிப்பும், பணம் வழங்க டோக்கனும் அளித்து வருவருவதாக திமுகவினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் வழங்க வேண்டிய பூத் சிலிப்பை அதிமுகவினர் வழங்கி வருவதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமநாதபுரம், மசக்காளிபாளையம், சித்தாப்புதூர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய அதிமுகவினரை திமுகவினர் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது, அவர்களிடமிருந்து பூத் சிலிப், பணம் வழங்குவதற்கான டோக்கன்களை காவல் துறையினர் கைப்பற்றினர். ஆனால், அதிமுகவினர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த, சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் காந்திபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படதற்கான சான்று (சிஎஸ்ஆர்)

அத்துடன், காவல் துறையினர் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும், இல்லையியெனில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம் எனவும் அவர் கூறினார். இதைடுத்து, புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் அதற்கான சான்றை (சிஎஸ்ஆர்) திமுகவினரிடம் வழங்கினர்.

இதையும் படிங்க:அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

ABOUT THE AUTHOR

...view details