கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயராம், திமுக வேட்பாளர் நா.கார்த்திக் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வரும் அவர்கள் அவ்வப்போது மக்களுடன் இணைந்து நடனமாடியும் காய்கறி விற்றும் ஆட்டோ ஓட்டியும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 29) மசக்காளிப்பாளையம் பாலன் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ஜெயராமனை அப்பகுதி மக்கள் கம்பு சுழற்றி வரவேற்றனர். அவர்களுடன் இணைந்து வேட்பாளரும் கம்பு சுழற்றினார். இது அப்பகுதி மக்கள் அனைவரையும் கவர்ந்தது.
அதே சமயம் எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் மக்களுடன் இணைந்து நடனமாடினார்.
சிங்காநல்லூரில் அதிமுக, திமுக தீவிர வாக்கு சேகரிப்பு - admk candidate
கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் அப்பகுதியில் பரப்புரை மேற்கொண்டனர்.
திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்
இதையும் படிங்க:சித்தப்பாவுக்காக வாக்கு சேகரித்த சுஹாசினி!