தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.பி. வேலுமணி கோட்டையில் கார்த்திகேய சிவசேனாபதி - DMK Candidate Thondamuthur viral video

கோவை: குனியமுத்தூர் பகுதியைப் பார்வையிடச் சென்ற திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு, காவல் துறையினர் கட்டுபாடு விதித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

karthikeya sivasenapathy
கார்த்திகேய சிவசேனாபதி

By

Published : Mar 16, 2021, 4:15 PM IST

கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று(மார்ச். 16), தொண்டாமுத்தூர் தொகுதிக்குள்பட்ட குனியமுத்தூர் பகுதியைப் பார்வையிட கார்த்திகேய சிவசேனாபதி சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த காவல் துறையினர் பொதுமக்களை இடையூறு செய்யக்கூடாது எனச் சேனாபதியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி காவல் துறையிடம் வாக்குவாதம்

இதனால், சிவசேனாபதிக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்த வாக்குவாதம் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவையில் கார்த்திகேய சிவசேனாபதி காரை சிறைப்பிடித்த அதிமுகவினர்!

ABOUT THE AUTHOR

...view details