தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விதிகளை மீறினால் பள்ளி வாகனங்களின் பர்மிட் ரத்து' -  ஆட்சியர் எச்சரிக்கை! - கு.ராசாமணி

கோவை : "விதிகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்களின் பர்மிட் ரத்து செய்யப்படும்" என்று, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரித்துள்ளார்.

கோவையில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு

By

Published : May 21, 2019, 8:15 PM IST

கோவை மாவட்டம் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஆண்டு தோறும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து துறை அலுவலர்கள், நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். கோவை காவலர் பயிற்சி பள்ளி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு இன்று தொடங்கியது. கோவை மாவட்டத்தில் உள்ள 340 பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டார்.

கோவையில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகரில் உள்ள 221 பள்ளிகளின் 1172 வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது. பிரேக், இஞ்சின், வாகன படிக்கட்டுகளின் உயரம், அவசர கால வழிகள் முறையாக இயங்குகின்றதா என பல்வேறு ஆய்வுகளுக்கு பின் பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டும் வாகனங்களுக்கும் அனைத்து விதிகளும் பொருந்தும். விதிகளை மீறி பள்ளி வாகனங்கள் இயக்கும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அனைத்து பேருந்துகளின் வேகம் குறித்து தணிக்கை செய்யப்படும், என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details