இதுகுறித்துமாவட்ட ஆட்சியர் கூறுகையில்,சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தை பொறுத்துவரை குழந்தைகள் நலனுக்காக குரல் கொடுக்கின்ற அமைப்புகள் மற்றும் இயக்கங்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்: மாவட்ட ஆட்சியர் உறுதி - கடுமையான தண்டனை
கோவை: சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்களுடைய மகளுக்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் இப்படியொருகொடுமை ஏற்படக்கூடாது.இதுவே முதலும்கடைசியுமாக இருக்க வேண்டும்.அதற்கு ஏற்றார்போல் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை தங்களுடைய மகளின் உடலை வாங்கப் போவதில்லை எனத்தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 4 பேர் மீது சந்தேகம் உள்ளதாகவும், அந்த இளைஞர்களை கைது செய்து விசாரித்தால் உண்மை வெளிவரும் எனவும்தெரிவித்தனர்.