தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை - சீரடி தனியார் ரயில்: சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் கண்டன ஆர்ப்பாட்டம் ... - சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன்

கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதனை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.

கோவை - சீரடி தனியார் ரயில்
கோவை - சீரடி தனியார் ரயில்

By

Published : Jun 14, 2022, 11:36 AM IST

Updated : Jun 14, 2022, 12:10 PM IST

கோயம்புத்தூர்: நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடிக்கு பாரத் கெளரவ் என்ற பெயரில் இன்று (ஜூன்.14) முதல் தனியார் ரயில் இயக்கப்படுகிறது. இந்த தனியார் ரயில் சேவைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ரயிலில் வழக்கமாக செல்லும் ரயில் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

இதே நிலை நீடித்தால் அனைத்து ரயில்களையும் தனியார் மயமாக்கக்கூடும் என பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில், சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கோவை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை - சீரடி தனியார் ரயில்

சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியாருக்கு ரயில் சேவை வழங்குவதை கண்டித்து கோஷம் எழுப்பிய அவர்கள் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

இது குறித்து சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் கூறுகையில்,"வாரத்திற்கு ஒருமுறை சிறப்பு ரயில் என ஆரம்பித்துத் தொடர்ந்து அனைத்து நாட்களிலும் தனியார் ரயில் சேவை என தொடர்ந்து விடும், தனியாருக்கு இந்த சேவையை வழங்குவது ஆபத்தானது. சாதாரண ரயில் கட்டணத்தை விட இந்த சிறப்பு ரயில் கட்டணம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரயில் என்பது தொடர்ந்து வாரம் முழுவதும் தனியார் ரயில் சேவை என்ற செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையிலிருந்து சீரடிக்கு தனியார் ரயில் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

Last Updated : Jun 14, 2022, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details