கரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் நவம்பர் 16ஆம் தேதி முதல், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதும், கருத்துக் கேட்பின் அடிப்படையில் பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கரோனா காலம் என்பதால் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் பூட்டியே இருந்து வருகிறது. அரசு இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தற்போது தளர்வு அறிவித்துள்ளது.