கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சி சார்பில் ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டு உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையம், 20 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை, தமிழர் பாரம்பரிய சிலைகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.05) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த அறிவு சார் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் வைக்கும் அலமாரியில், கோவையின் பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் அடையாளச் சின்னங்கள் இடம்பெற்று உள்ளன. இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள அலமாரியில் ஆதியோகி புகைப்படம் இடம்பெற்று உள்ளது. இதைத் தொடர்ந்து, இதனை அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சட்ட விரோத மணல் விற்பனை வழக்கு; அமலாக்கத்துறை சம்மனுக்கு நீதிமன்றம் தடை விதிப்பு..!