தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியின் இறுதி ஊர்வலம் - கண்ணீர்விட்ட கோவை மக்கள் - ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Student's funeral procession with slogans of justice
Student's funeral procession with slogans of justice

By

Published : Nov 14, 2021, 8:25 PM IST

Updated : Nov 16, 2021, 10:14 PM IST

கோவை:12ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியையை தனிப்படை காவல் துறையினர் பெங்களூருவில் வைத்து கைது செய்த நிலையில், உயிரிழந்த மாணவியின் உடலை பெற்றோர் இன்று (நவ.14) பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து ஆத்துப்பாலம் மின்மயானம் வரை மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதில் பெரியார் திராவிடர் கழகத்தினர், எஸ்டிபிஐ கட்சியினர், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாணவியின் புகைப்படத்துடன் கூடிய பாதாகைகளை ஏந்தி, நீதிகேட்டு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதனையடுத்து அவரது ஆத்துப்பாலம் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவைத் தாக்கும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் - பாமக நிர்வாகி

Last Updated : Nov 16, 2021, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details