தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் வாழை மரங்கள் சேதம்: பயீர் காப்பீடு கிடைக்கதால் விவசாயிகள் அதிருப்தி - பயிர் காப்பீடு

கோயம்புத்தூர்: கனமழை காரணமாக சேதமடைந்த வாழை மரங்களுக்கு பயீர் காப்பீடு தொகை கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

banana
banana

By

Published : Nov 6, 2020, 4:25 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது.

நேற்று (நவம்பர் 5) மாலை அன்னூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கணுவக்கரை, ஆம்பூர், அக்கரைசெங்கபள்ளி ஆகிய பகுதிகளில் 15 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமானது.

வாழைப்பழங்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "இங்குள்ள விவசாயிகள் பலர் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கூட்டுறவு கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று பெய்த மழையால் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முற்றிலும் சேதமானது. பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில், பயிர் காப்பீடு காலாவதியானதால் நிவாரணம் கொடுக்க முடியாது என கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பயிர் காப்பீடு என்பது அதன் அறுவடைக்காலம் வரை இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயி

ஆனால் அவ்வாறு செய்யாமல் பாதியிலேயே காலாவதி ஆவதால் இது போன்ற பாதிப்புகளின்போது எங்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை. தமிழ்நாடு அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஏற்கனவே கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் சூழலில் தற்போது இந்த பாதிப்பு என்பது எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால் விவசாயத்தை விட்டு கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படும்" என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details