கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட, கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் இன்று (ஆக்13) 398 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 478 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 5 பேர் சிகிச்சைப் இன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நான்காயிரத்து 746 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க:உலக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கரோனா உறுதி!