தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை விமான நிலையத்தில் கரோனா சோதனை - கரோனா சோதனை

கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக, கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 23, 2022, 10:38 PM IST

கோவை விமான நிலையத்தில் கரோனா சோதனை

கோயம்புத்தூர் விமான நிலைய வளாகத்தில் செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், 'கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு இரண்டு சர்வதேச விமானங்கள் வருகின்றன. விமானத்தில் வரும் பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேன் முறையில் அவர்களின் உடல் வெப்பமானது பரிசோதிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தினமும் 400 பேர் சராசரியாக கோவை வருகின்றனர்.

விமானத்தில் வரும் 2 சதவீத பயணிகளின் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. நேற்று இரவு முதல் சர்வதேச விமானத்தில் வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களில் இதுவரை யாருக்கும் கரோனா அறிகுறிகள் இல்லை. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சுழற்சி முறையில் பணியாளர்கள் விமான நிலையத்தில் உள்ளனர்.

அவர்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதித்து அனுப்பப்படுகின்றனர். கரோனா அறிகுறி இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க:"டிக்..டிக்..டிக் பயந்துட்டியா... மல"; போஸ்டரால் கோவையில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details