தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடி வந்த யானை..குழந்தையை கண்டதும் திரும்பிச் சென்ற நெகிழ்ச்சி!

கோவை அருகே பெண் ஒருவரை மிதிக்க வந்தபோது குழந்தை இருந்ததைக் கண்டு யானை திரும்பி சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக அப்பெண் எலும்பு முறிவுடன் உயிர் தப்பினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 8, 2023, 3:03 PM IST

Updated : Mar 8, 2023, 3:44 PM IST

ஓடி வந்த யானை..குழந்தையை கண்டதும் திரும்பிச் சென்ற நெகிழ்ச்சி!

கோவை: ஆனைகட்டி அருகே ஊருக்குள் நள்ளிரவில் நுழைந்த பெண்ணொருவரை துரத்தி தள்ளிவிட்ட நிலையில், அவரின் குழந்தை அழுவதைக் கண்டு அவரை தாக்காமல் திரும்பிச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், ஆனைகட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைக் கூட்டங்கள் அப்பகுதியில் உள்ள மலை அடிவாரத்தின் கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக படையெடுத்து வருகின்றன.

தற்போது தடாகம் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதானால், இந்த யானைகள் அருகில் உள்ள பெரிய தடாகம், வரப்பாளையம் வீரபாண்டி, சோமையனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் புகுந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு இன்று (மார்ச்.8) அதிகாலை 4 மணி அளவில் சோமையனூர் பகுதியில் உள்ள நல்லதம்பி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் வீட்டின் அருகே இருந்த வாழை மரத்தை வேரோடு சாய்த்து சாப்பிட்டது.

மேலும், வீட்டு சுவற்றின் அருகே வந்து பிளிறியதால் வீட்டின் உள்ளே இருந்த பாலாமணி என்பவர் பயத்தினால் தனது தம்பியின் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடியுள்ளார். இதனைப் பார்த்த யானை பாலாமணியை துரத்தி கீழே தள்ளிவிட்டது. அப்போது குழந்தை பயத்தினால், 'அம்மா..அம்மா' என அலறியதைக் கண்ட அந்த யானை அங்கிருந்து அப்பெண்ணை தாக்காமல் திரும்பிச் சென்றது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் பாலாமணி மற்றும் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

யானை தள்ளியதில் பாலாமணிக்கு முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை எவ்வித காயமும் இன்றி தப்பியது இது குறித்து பாலாமணியின் உறவினர் ரேவதி கூறுகையில், 'நேற்று இரவு வழக்கம் போல், பாலாமணி என்னுடைய குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார்.

அப்போது யானை வீட்டின் சுவற்றின் அருகே நின்று கொண்டு பிளிறியதால் பயத்தில் தன்னையும் குழந்தையும் பாதுகாக்க அருகில் உள்ள வீட்டிற்கு செல்ல முயன்ற போது, யானை அவரை துரத்தி கீழே தள்ளியது. பின்னர் அவரை காலால் மிதிக்க முயன்ற போது குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட யானை, அப்படியே அங்கிருந்து திரும்பிச் சென்றது. யானை தள்ளியதில் பாலாமணிக்கு முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது நல்வாய்ப்பாக இருவரும் யானையிடம் இருந்து உயிர்த்தப்பினர்' என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இரவில் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அப்பகுதியில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை அருகே சுமார் 30 மயில்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா? - வனத்துறை விசாரணை

Last Updated : Mar 8, 2023, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details