கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருந்த இரண்டு மருத்துவ மாணவர்களுக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்தால் பணிக்கு வரமுடியாது எனக் கூறி சென்றுவிட்டனர். இதன் காரணமாக மருத்துவ மாணவர்களுக்கு உணவு கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
நேற்று மருத்துவமனை உணவகத்தில் உணவு, தண்ணீர் போன்ற வசதிகள் வழங்க இயலாது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. மருத்துவ மாணவர்கள் தங்களுக்குப் போதுமான மாற்று ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி செய்து தரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பாக்கெட் சாப்பாடு நேற்று இரவு இது குறித்து உயர் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காலை மருத்துவ மாணவர்களுக்கு உப்புமாவும், பிற்பகலில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. மருத்துவ மாணவர்களைப் பொறுத்தவரை தங்களுக்கு தரமான உணவுகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் தரமான உணவு கேட்கும் மாணவர்களை மிரட்டி வருவதாகக் கூறப்படுகின்றன.
சரியான உணவு கிடைக்காத மருத்துவ மாணவர்கள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். கரோனா சிகிச்சையில் பெரும்பாலான பணிகளில் ஈடுபடும் இந்த முதுகலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மாணவர்கள் ஆகியோருக்கு உணவகத்தில் தரமான உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் - உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு!