கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்துள்ள நிலையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில், கோயம்புத்தூர் - தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 69ஆவது பூத் வரிசை எண் 633இல் வாக்காளர் ஒருவரது பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.