கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் அடுத்த ரொட்டிக்கவுண்டனூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், வேலைசெய்யும் இடத்தில் தங்களை கொத்தடிமைகளாக நடத்துவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (ஜூலை10) புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், “நாங்கள் ரொட்டிக்கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருகிறோம், எங்களுடைய தேவைக்காக அருகிலுள்ள தோட்ட உரிமையாளர்களிடம் பணம் வாங்கிய நிலையில், தங்களை குடும்பத்துடன் வந்து தோட்டத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டும் எனவும், காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்துகின்றனர். மேலும், பணம் கொடுத்த தோட்ட உரிமையாளர்கள் இரவு நேரங்களில் வந்து மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.