தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் மீண்டும் ஓர் துயரம்: சாலையோரம் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி! - BODY FOUND DEAD

கோவை: பொள்ளாச்சி அடுத்த பூசாரிபட்டி பகுதியில் சாலையோரம் கிடந்த கல்லூரி மாணவியின் சடலத்தை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி சடலமாக மீட்பு

By

Published : Apr 6, 2019, 11:08 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ராகவன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மகள் பிரகதி. இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதவியல் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டிற்கு வருவதாக செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, இரவாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த வெள்ளச்சாமி, மகளின் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப்பாகி இருந்துள்ளது. உடனடியாக காட்டூர் காவல் நிலையத்தில் வெள்ளச்சாமி புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியைத் தேடி வந்தனர். இந்நிலையில், பூசாரிபட்டி பகுதியில் சாலையோரம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொதுமக்கள் கோமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியே தனது கணவருடன் கேரளாவிற்கு சென்ற கோமதி என்ற பெண் சாலையோரம் கூட்டமாக இருந்ததை கண்டு வாகனத்தை விட்டு கீழே இறங்கி பார்த்த போது, இறந்து கிடந்தது தனது தோழியான பிரகதி என்று தெரியவந்துள்ளது.


இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறையினரிடம் இறந்தது கிடப்பது தனது ஊரைச் சேர்ந்த தோழி பிரகதி என்றும், அவருக்கு நாட்டுத்துரையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சியமாகி இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details