தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை அரசு மருத்துவமனையை ஆட்சியர் ஆய்வு!

கோவை: தலைமை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Coimbatore

By

Published : Nov 22, 2019, 11:20 PM IST

கோவை தலைமை அரசு மருத்துவமனை சென்ற மாவட்ட ஆட்சியர் ராசாமணி, அங்குள்ள சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நோயாளிகள், புறநோயாளிகளை பார்க்க வந்தவர்களிடம் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அவரிடம் சில நோயாளிகள், பார்வையாளர்கள் மருத்துவமனையில் கழிப்பிட வசதி, அமர்வு வசதிகள், குடிநீர் வசிதிகள் உள்ளிட்ட வசதிகள் முழுவதும் செயல்படவில்லை எனத் தெரிவித்ததற்கு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், "இந்த ஆய்வானது கோவை அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது. மருத்துவமனையில் என்னென்ன தேவைகள் உள்ளன. நோயாளிகள், பார்வையாளர்கள் ஏதேனும் குறைகளையோ தேவைகளையோ கூறிகிறார்களா? என அறிவதற்கு நடத்தப்பட்டது ஆகும்.

அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு

இங்கு பிரதான பிரச்னையான மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு, கோவை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய ரூ.124 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, கூடிய விரைவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார். ஆய்வில் மருத்துவமனை முதல்வர் அசோகன், கண்காணிப்பாளர் சடகோபன் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: உயர் கோபுர மின்விளக்கு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details