கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோயம்புத்தூரில் இது வரை, கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பொது வெளியில் அனைத்து தரப்பினரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியாவசியத் தேவைகளுக்காக வருபவர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முகக்கவசம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா அறிகுறி இருந்தும் சிகிச்சை பெறாமல் இருப்பவர்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுச் சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.