மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிதிபாண்டே (31) என்ற பெண் கத்தார் நாட்டில் உள்ள விமான நிலைய தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிவருகிறார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிநாராயணன் என்பவரும் அதே இடத்தில் வேலை செய்துவந்துள்ளார்.
இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதித்து திருமணத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளனர். ஒப்புதல் அளித்ததன் காரணமாக திருமணத்திற்கு முன்னே இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
ம.பி. பெண்ணை ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றிய கோவை இளைஞர் மீது புகார் இந்நிலையில் லட்சுமிநாராயணன் நிதிபாண்டேவை திருமணம் செய்ய மறுப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய பணிகள் நடைபெற்றுவருவதாகவும் நிதிபாண்டேவிற்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே தன்னை ஆசைவார்த்தையால் ஏமாற்றிய லட்சுமிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் நிதிபாண்டே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்மனு அளித்தார்.
இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது