கோயம்புத்தூர்:கோவை-பெங்களுரூ இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் டிச.30 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இதற்கான சோதனை ஓட்டத்தை இன்று ரயில்வே அதிகாரிகள் கற்பூரம் காட்டி பூசணிக்காய் உடைத்து துவக்கி வைத்தனர்.
நாடு முழுவதும் பொதுமக்களின் பயணத்தை எளிமையாக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 35 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொது மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை வரும் 30ம் தேதி துவக்கப்பட உள்ளது.
இந்த புதிய சேவை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களுரூவிற்கு இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்க இருக்கின்றார். இந்நிலையில் இதற்கான சோதனை ஓட்டமானது இன்று காலை 5 மணி அளவில் தொடங்கியது.
கோவை ரயில் நிலையத்தில் கற்பூரம் காட்டி பூசணிக்காய் உடைத்து இந்த சோதனை ஓட்டத்தை ரயில்வே அதிகாரிகள் துவக்கி வைத்தனர். கோவை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பிய சோதனை ஓட்ட ரயில் 11.30 மணி அளவில் பெங்களூரு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது