தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் அதிகரிக்கும் கரோனா தொற்று - 13,000ஐ நெருங்கிய பாதிப்பு

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது.

Coronavirus
Coronavirus

By

Published : Aug 27, 2020, 9:06 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட, கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் இன்று (ஆகஸ்ட் 27) 439 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 398ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 357 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 799ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் கோவை, கடலூர், சேலம் மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தினம்தோறும் சராசரியாக 300 முதல் 400 வரை, புதிய கரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.


இதையும் படிங்க:10ஆவது முறையாக கரோனா நிவாரண நிதி வழங்கிய யாசகர்!

ABOUT THE AUTHOR

...view details