தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் சூடுபிடிக்கும் பழைய பைக் விற்பனை!

கோவை: கரோனா அச்சம் காரணமாக பேருந்து பயணத்தில் இருந்து சொந்த இருசக்கர வாகனங்களுக்கு மாறிய பணியாளர்கள் குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு.

public transport is paralyzed
old two wheelers sales increase

By

Published : Oct 28, 2020, 11:40 PM IST

Updated : Oct 29, 2020, 8:57 PM IST

கரோனா வைரஸ் காரணமாக அனைத்துவிதமான தொழில்களும் முடங்கி தற்போது மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றன.

நடுத்தர மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து கரோனா பரவல் காரணமாக மிகக் குறைவாகவே இயக்கப்படுவதால் பணிக்குச் செல்ல சிரமப்பட்டனர், இதனால் இருசக்கர வாகனங்களின் தேவை அத்தியாவசியமாக மாறியது. பழைய இருசக்கர வாகன விற்பனை சூடுபிடிக்கவும் தொடங்கியது.

சூடுபிடிக்கும் பழைய பைக் விற்பனை

விற்பனையின் பின்னணி குறித்து கோவையில் உள்ள பழைய இருசக்கர வாகன விற்பனையகத்தின் உரிமையாளர் சரவணக்குமாரிடம் பேசினோம்.

விற்பனையின் பின்னணி

பொதுப் போக்குவரத்தை தவிர்க்க பழைய இருசக்கர வாகனங்களை ஏராளமானவர்கள் வாங்கிச் செல்வதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டைவிட பழைய இருசக்கர வாகனங்களின் விற்பனை 15 - 70 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

டி.வி.எஸ் எக்ஸ்.எல் முதல் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் வரை விற்பனைக்கு உள்ளதால் தங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் வாகனங்களை வாங்கிச் செல்வதாக சரவணக்குமார் பகிர்ந்துகொண்டார்.

கரோனா தாக்கத்திற்கு முன்பு மாதத்துக்கு ஐந்து முதல் பத்து வாகனங்கள் விற்பனை ஆவதே கடினமாக இருந்த சூழலில் தற்போது நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று வாகனங்கள் விற்பனை ஆவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

விற்பனைக்காக பழைய இருசக்கர வாகனங்கள்

பழைய இருசக்கர வாகனம் வாங்க வந்த ராம்குமாரிடம் பேசினோம்.

கரோனா அச்சம் காரணமா?

பேருந்தில் சென்றால் தொற்று ஏற்படும் என்ற பயத்தினால் மக்கள் குறைந்த விலையில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வாங்கி அதில் வேலைக்குச் செல்ல முடிவு எடுத்துள்ளதாக கூறும் வாடிக்கையாளர் ராம்குமார், இதன்மூலம் பாதுகாப்பாக அலுவலகம் சென்று வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

கரோனா தொற்று காரணமாக பழைய இருசக்கர வாகனத்தின் தேவை அதிகரித்துள்ளதால் கோவை, அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் அனைத்திலும் விற்பனை சூடுபிடித்துள்ளது.

ஏற்கனவே பழைய இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தற்போது புதிய வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டாததால் பழைய இருசக்கர வாகனங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் விற்பனையாளர்கள்.

இதையும் படிங்க:பயணிகள் வாகன விற்பனை 26% உயர்வு

Last Updated : Oct 29, 2020, 8:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details