கோயம்புத்தூர்: கடந்த 2018ஆம் ஆண்டு சிங்காநல்லூர் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியை சேர்ந்த பாபு என்பவரை 5 இளைஞர்கள் (ஆனந்தராஜ், நவீன்குமார், பூசாரி மணி, நவீன்குமார், சசிமோகன், மோகன்பாபு) வழி மறித்து பணம் கேட்டபோது பணம் இல்லை என்று கூறியதால் பாபுவை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர்.
படுகாயங்களுடன் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினர் தப்பி சென்ற நபர்களை கைது செய்தனர்.