தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டிற்கு மூட்டை பூச்சி மருந்து அடித்து மகள் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தாய் மரணம் - மூட்டை பூச்சி மருந்து அடித்து தாய் மகள் பலி

கோயம்புத்தூர்: நல்லாம்பாளையம் பகுதியில் வீட்டிற்கு அடித்த மூட்டைப்பூச்சி மருந்தால் தாய், மகள் உயிரிழந்தனர்.

துடியலூர் காவல் நிலையம்
துடியலூர் காவல் நிலையம்

By

Published : Oct 31, 2020, 9:39 PM IST

கோயம்புத்தூர் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி பிரேம குமாரி. இந்தத் தம்பதியினர், அவர்களது மகள் அனுராதா, மருமகன், பேரக்குழந்தைகளுடன் வசித்துவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 30) வீட்டின் கீழ்தளத்தில் இருந்த படுக்கை அறைக்கு மூட்டைப்பூச்சி மருந்து அடித்துள்ளனர். மருந்தின் துகள்கள் காற்றில் பறந்த நிலையில் அதனை வீட்டில் இருந்தவர்கள் சுவாசித்து இருக்கின்றனர்.

இந்த மருந்து நெடியால் நள்ளிரவில் சண்முகத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சண்முகத்தை அவரது மருமகன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதனையடுத்து ஏற்கனவே சுவாசக் கோளாறு இருந்த அனுராதா இன்று (அக்டோபர் 31) காலை மருந்து நெடியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அனுராதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துவரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மகள் உயிரிழந்தது குறித்த தகவல் பிரேமா குமாரிக்குத் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த பிரேமா குமாரி மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details