தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில், கோவையில் அக்கட்சியினர் வேல் யாத்திரையை தொடங்கி அம்மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக சென்றனர்.
அப்போது எல்.முருகன், தான் கையில் எடுத்து வந்த வேலை முருகன் சன்னதிக்குள் (கருவறை) வைத்து வழிபட கூறிய போது, கோயில் நிர்வாகத்தினர் அப்படி செய்ய முடியாது என அனுமதி மறுத்துவிட்டனர்.
கோவிலின் வழிபாட்டு முறை படியும், அற நிலை விதிமுறையின் படியும் அவ்வாறு செய்ய இயலாது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அக்கட்சியினருக்கும் கோயில் நிர்வாகத்திற்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வேலை சன்னதிக்கு வெளியே வைத்து வழிப்பட்டு விட்டு, பாஜகவினர் பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டனர்.
இதையும் படிங்க:வேல் யாத்திரை பெயரில் பாஜக ஆன்மிக நாடகம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு