கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம் மருத்துவமனைகளில் ஊழியர்கள், செவிலியர், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் பல்வேறு இடங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் நிலையில் அங்கு பணிபுரியும் செவிலியர் பலரும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதனால், இதர நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமாக செவிலியர் இல்லாததால் தற்போது பணியாற்றி வரும் செவிலியருக்கு அதிக பணிச்சுமை ஏற்ப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.