கோயம்புத்தூர் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் வசிப்பவர் ரமேஷ்குமார். இவர் டவுன்ஹாலில் ஸ்டுடியோ வைத்திருக்கிறார். நேற்று மதியம் இவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் மாலை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து சுமார் 167 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள், 1.5 லட்சம் பணம் உள்ளிட்டவைகள் திருடு போயிருந்தன.
கோவையில் 167 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு! - silver
கோவை: ஸ்டுடியோ வைத்திருப்பவர் வீட்டில் 167 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள், 1.5 லட்சம் பணம் உள்ளிட்டவைகள் பட்டப்பகலில் திருடுபோயுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
theft house
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.