கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதி, அன்னம்மாநாயக்கம் சந்து, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சில கடைகளில் பாமாயில், டால்டாவினை கொண்டு போலியாக நெய் தயாரித்து அதனைச் சந்தை போன்ற இடங்களில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
போலி நெய் பாட்டிகளை பறிமுதல் செய்யும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இதையடுத்து, சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ போலி நெய் பாட்டில்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் நெய்த் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த அம்சா, ராஜேஷ்வரி, ராஜாமணி, கலா, முனிஸ்கா, அழகுபாண்டி, ராஜேஷ்வரி, முத்துரகு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : போலி நகை வைத்து வங்கி ஊழியர் ரூ. 45 லட்சம் மோசடி ?