தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் நடந்துசென்ற யானைகளால் வாகன நெரிசல்

கோவை: வெள்ளகிணறு பகுதியில் யானைகள் சாலையில் நடந்துசென்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Coimbatore - Mettupalayam road
Coimbatore elephant

By

Published : Jan 2, 2020, 2:34 PM IST

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பன்னிமடை, வரப்பாளையம் பகுதியிலிருந்து வெள்ளகிணறு பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் வழி மாறி வந்துள்ளன.

வழிமாறி வந்த காட்டுயானைகள் காட்டுக்குள் செல்ல வழி தெரியாமல் சுமார் 10 நிமிடம் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் நடந்துசென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அங்கே வாகன நெரிசல் ஏற்பட்டது. 10 நிமிடங்கள் கழித்து சாலையில் நடந்துசென்ற காட்டு யானைகள், ஊருக்குள் சென்றன. அதன்பின் அங்கு வாகனங்கள் அனைத்தும் சீராகச் செல்ல தொடங்கின.

சாலையில் நடந்துசென்ற யானைகள்

அப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற காட்டு யானைகள் வழிமாறி காட்டிற்குள்ளிருந்து தேசிய நெடுஞ்சாலை வருகின்றன. அதனால் அங்கு அதிகமாக வாகன நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இதையும் படிக்க: மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சியை இனி தொடர்பு கொள்ளலாம்!

ABOUT THE AUTHOR

...view details