தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை மாவட்ட நிர்வாகம் அவசர அறிவிப்பு! என்ன தெரியுமா? - கோவை வெள்ள அபாயம்

கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுரை
கோவை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுரை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 6:35 PM IST

கோவை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 26ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இதனை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ள அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கோவையில் குட்டையில் சிக்கிய குட்டி யானை.. பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்!

ABOUT THE AUTHOR

...view details