தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏப்.30-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: கோவை மாநகராட்சி அதிரடி ஆஃபர்!

சொத்து வரியை மக்கள் வரும் ஏப்ரல் 30 க்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அறிவித்துள்ளார்.

Coimbatore corporation
கோவை மாநகராட்சி

By

Published : Apr 19, 2023, 9:30 AM IST

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 13.04.23 முதல் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 4{1}-ல், (Five percent property tax payable by an assesse, subject to a maximum of five thousand rupees shall be granted as an incentive, who has paid the property tax within thirty days from the date of commencement of the half - year) அதன்படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023 - 24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.

சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை செலுத்த மாநகராட்சி மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகள் வாயிலாக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மூலம் வரிவசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் சொத்து வரியினை செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், இதன் மூலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 1500 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடு.. தாட்கோ மூலம் பெண்களுக்கு சலுகை.. அமைச்சர் கயல்விழி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details