தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நொய்யல் ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: கோவை ஆட்சியர் பேட்டி! - Noyyal River plan

கோவை: முதலமைச்சர் தொடங்கிவைத்த ரூ. 230 கோடி மதிப்பிலான நொய்யல் ஆறு தூர்வாரும் பணியின்போது ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி  நொய்யல்  நொய்யல் ஆறு தூர்வாறும் பணி  நொய்யல் ஆறு  ராசாமணி  Coimbatore collector rajamani  Noyyal River  Noyyal River plan  noyyal rehabilitation work
நொய்யால் ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: கோவை ஆட்சியர் பேட்டி

By

Published : May 28, 2020, 4:05 PM IST

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் 158 கி.மீ., தூரம் பயணிக்கும் நொய்யல் ஆறு தூர்வாரும் பணியை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். ரூ. 230 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு விவசாயிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, "விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். இத்திட்டமானது 24 மாதத்திற்குள் செயல்படுத்தப்படவுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் பேட்டி

இதன் மூலம் 18 அணைக்கட்டுகள், 22 குளங்கள் தூர்வாரப்படும். புதிதாக சில அணைக்கட்டுகளும் கட்டப்பட உள்ளன. இதனால் 36 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் வளம்பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளது. நொய்யல் ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகள் இந்தப் பணியின்போது அகற்றப்படும். ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலக்காமல் இருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க:கேரள அரசு மீண்டும் அடாவடி: சிறுவாணி அணையின் பழைய குழாயை மூடும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details